மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
Published on

தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஊராட்சி மூட்டக்காம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தோகைமலை வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி வரவேற்று பேசினார். இதில் தன்னார்வலர் பர்வீன், பள்ளி ஆசிரியர் மணி, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பயின்று வரும் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com