மரக்கன்றுகள் நடும் பணி

மானாமதுரை நகராட்சியில் பூமி தினத்தை முன்னிட்டு நீர்நிலை கூட்டு துப்புரவுபணி மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் பணி
Published on

மானாமதுரை

மானாமதுரை நகராட்சியில் பூமி தினத்தை முன்னிட்டு நீர்நிலை கூட்டு துப்புரவுபணி மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் செட்டிகுளத்தில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் லதாமணி வரவேற்றார். நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். என் குப்பை என் பொறுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு செட்டிகுளத்தில் துப்புரவு பணி மேற்கொண்டு வேம்பு, மருது, புங்கம் மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் தூய்மைப்பணி மேற்பார்வையாளர் கார்த்திக் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி பரப்புரையாளர்கள், தூய்மைபணியாளர்கள் கலந்து கொண்டனர். துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com