சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 போலீசாரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சாத்தான்குளம்  தந்தை -மகன் கொலை வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித் தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 23-ந்தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி முத்துக்குமரன் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என இந்த கோர்ட்டு முடிவு செய்கிறது. இவர்களுக்கு தண்டனை வழங்குவது சம்பந்தமாக மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு ஆகியவை தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.

அவர்களின் மனநலம், உடல்நிலை தொடர்பான அறிக்கை ஆகியவற்றையும் வருகிற 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 9 போலீசாருக்கும் என்னென்ன தண்டனை என்ற விவரங்கள் 30-ந்தேதி (அதாவது இன்று) அறிவிக்கப்படும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று 9 போலீஸ்காரர்களுக்கும் தண்டனை விவரம் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com