சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஜாமின் மனு ஒத்தி வைப்பு

முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் வழக்கு விசாரணை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஜாமின் மனு ஒத்தி வைப்பு
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல்நிலைய முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோன்று பெனிக்ஸின் தாயார் செல்வராணி தரப்பிலும் ஜாமின் வழங்ககூடாது என வாதிட்டனர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com