சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக் குறைவு

மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக் குறைவு
Published on

மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் மதுரையில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் வழக்கில் தொடர்புடைய மற்றொரு காவலரான முருகனின் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com