சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்

பழனியில் சத்துணவு- அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.
சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்
Published on

திண்டுக்கல் மாவட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் பழனியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6750 வழங்க வேண்டும், ஓய்வுபெறும் நாளிலேயே பி.எப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com