பள்ளி மாணவன் மீது சக மாணவர்கள் சாதி வெறியில் தாக்குதல்: என்ன விளக்கம் தரப்போகிறார் முதல்வர்? - எடப்பாடி பழனிசாமி

மாணவர்கள் இடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று, 11-ம்வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் சாதி வெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

Also Read
சென்னை: கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றபோது காணாமல்போன மராட்டிய இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது
கோப்புப்படம்

இது தான் சமூகநீதியா மு.க.ஸ்டாலின் அவர்களே? இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது? இப்படி மாணவர்கள் இடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு? பிரசார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் பொம்மை முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா?

Also Read
கொளத்தூரில் ரூ.1.61 கோடியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோப்புப்படம்

தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த பொம்மை முதல்வர்? மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Also Read
ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள் தற்போது... - மு.க.ஸ்டாலின் பதிவு
கோப்புப்படம்

தமிழக மக்களே - சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com