மன்னார்குடியில் லாரி மோதி பள்ளி மாணவர் உயிரிழப்பு


மன்னார்குடியில் லாரி மோதி பள்ளி மாணவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 July 2025 9:59 AM IST (Updated: 2 July 2025 11:14 AM IST)
t-max-icont-min-icon

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் அமரேஷ். இவர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் அமரேஷ் தனது தந்தையுடன் இன்று காலை சென்றுகொண்டிருந்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது எதிர்பாராதவிதமாக மாணவர் மற்றும் அவரது தந்தை மீது மோதியது.

இந்த கோர விபத்தில் மாணவர் அமரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மாணவரின் தந்தை படுகாயமடைந்தார்.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

1 More update

Next Story