பள்ளி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் - அமைச்சர் சிவசங்கர்

பள்ளி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் - அமைச்சர் சிவசங்கர்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயகத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

பள்ளி வாகனங்களில் கேமராக்கள் முன்னும் பின்னும் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com