பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது
Published on

குழித்துறை,

குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக தோட்டவாரத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(வயது 58) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களில் சிலர், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கல்வி அதிகாரிகள் மற்றும் , கலெக்டருக்கும் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மையென தெரியவந்தது.

அதேபோல் ஒரு மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் ரமேஷ்மார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com