பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை

பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை தந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டனர். பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் வகுப்புகள் தொடங்கப்பட்ட முதல் நாளில் இடவசதி இருந்த பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர். இட வசதி இல்லாத பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டு, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிகள் திட்டமிட்டு, அதன்படி நேற்று வகுப்புகள் நடத்தப்பட்டன.

அந்தவகையில் முதல் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சுமார் 75 முதல் 85 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையை பொறுத்தவரையில், பெரும்பாலான மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com