அறிவியல் கண்காட்சி

பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
அறிவியல் கண்காட்சி
Published on

வேதாரண்யம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதை பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில் பன்னாள், ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், தகட்டூர், புஷ்பவனம், கோடியக்காடு உள்ளிட்ட இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நடுவர்களாக ஆசிரியர்கள் சிவக்குமார், செந்தில்குமார், ராஜ்குமார், ரவி ஆகியோர் இருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகள் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com