பெண்ணுக்கு கத்திக்குத்து

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண்ணுக்கு கத்திக்குத்து
Published on

புதுவை தானாம்பாளையம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 34). சலவை தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சண்முகம் தனது மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com