விண்ணப்பித்தவர்களின் கோரிக்கை விவரங்கள் ஆய்வு

விண்ணப்பித்தவர்களின் கோரிக்கை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
விண்ணப்பித்தவர்களின் கோரிக்கை விவரங்கள் ஆய்வு
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக முறையே படிவம்-6, படிவம்-7 மற்றும் படிவம்-8 ஆகிய படிவங்கள் பெறப்பட்டன. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9,847 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 2,394 விண்ணப்பங்களும், பட்டியலில் திருத்தம் செய்தல் தொடர்பாக 3,926 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இதையடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது விண்ணப்பித்தினை பரிசீலனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளின் உண்மை தன்மை குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேற்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பதாரரின் கோரிக்கை குறித்த விவரங்களையும், அவர்களின் விண்ணப்பங்களுடன் கோரிக்கைக்கான முறையான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com