ராகுல் காந்தியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம்!

இஸ்ரேலை ஆதரிப்பதன் மூலம், ராகுல் காந்தி நேருவின் பாரம்பரியத்தை கைவிட்டது மட்டுமல்லாமல், கவலையளிக்கும் அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ராகுல் காந்தியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம்!
எஸ்டிபிஐ
Published on: 

சென்னை,

ராகுல் காந்தியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம்! நேருவின் பாரம்பரியத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் என விமர்சனம். இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கண்டனம்

இஸ்ரேலுக்கு ஆதரவாக ராகுல் காந்தி எடுத்துள்ள நிலைப்பாட்டை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக எதிர்ப்பதுடன், தனது கடும் கண்டனத்தையும் பதிவு செய்கிறது. இஸ்ரேலின் ஆதரவை பெறுவதற்கான ஆர்வத்தில், நீதி, சர்வதேச சட்டம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நிற்பவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில், ராகுல் காந்தி ஒரு கொடூரமான மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் ஆதரவு

ராகுல் காந்தியின் இந்த இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எஸ்டிபிஐ கட்சி மிக கடுமையான வார்த்தைகளால் நிராகரிக்கிறது. அவரது இந்த நிலைப்பாடு, தமது காலத்தில் காலனித்துவ எதிர்ப்பு மற்றும் நிறவெறி எதிர்ப்பு போராட்டங்களுக்கு உறுதியாக துணைநின்ற ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் அப்பட்டமாக முரண்படுகிறது என்று நாங்கள் கருதுகிறோம். இஸ்ரேலை ஆதரிப்பதன் மூலம், ராகுல் காந்தி நேருவின் பாரம்பரியத்தை கைவிட்டது மட்டுமல்லாமல், கவலையளிக்கும் அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சமத்துவ கொள்கைகளுக்கு எதிரானது

இந்தியாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை உறுதி செய்வதற்காக மட்டுமே, இனப்படுகொலை, நிறவெறி மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் நீண்ட வரலாற்றை கொண்ட இஸ்ரேலை ஆதரிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது மற்றும் தேவையற்றது என்பதில் எஸ்டிபிஐ கட்சி உறுதியாக உள்ளது. மனித உரிமை மீறல்களுக்கும், அளவற்ற துயரங்களுக்கும் காரணமான ஒரு ஆட்சியை ஆதரிப்பதை எந்தவொரு அரசியல் அல்லது ராஜதந்திர வசதியும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய நிலைப்பாடு தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் நீதி, சமத்துவ கொள்கைகளுக்கு எதிரானது.

வலியுறுத்தல்

எனவே, இந்த பொறுப்பற்ற நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X