மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு

மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு மீட்கப்பட்டது.
மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு
Published on

சாயல்குடி, 

சாயல்குடி அருகே நரிப்பையூர் கடல் பகுதியில் மீனவர்கள் நரிப்பையூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், நரிப்பையூர் ஊராட்சி வேப்பமரத்துப்பனை யோசேப்பு ஆகியோர் கரை வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கரைவலையில் அரிய வகை கடல் பசு சிக்கி உள்ளது. இதையடுத்து மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து தூத்துக்குடி வனச்சரக அலுவலர்கள் அங்கு வந்து மீனவர்களின் வலையில் சிக்கிய கடல் பசுவை மீட்டு வனத்துறையினர் மீனவர்கள் இணைந்து மீண்டும் கடல் பசுவை கடலில் விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com