10, 12-ம் வகுப்புக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நாளை தொடக்கம்..!

10, 12-ம் வகுப்புக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நாளை தொடங்குகிறது.
10, 12-ம் வகுப்புக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நாளை தொடக்கம்..!
Published on

சென்னை,

பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் முதற்கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது.

இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு (நாளை) 28-ந் தேதி முதல் தொடங்குகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை முழு மூச்சில் செய்து வருகிறது.

10 மற்றும் 12-ம் வகுப்பு முதற்கட்ட தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறை 2 வகையான வினாத்தாளை முறையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்திருக்கிறது.

10, 12-ம் வகுப்புகளை தொடர்ந்து, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com