பிறந்தநாளுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய முதல் அமைச்சர் விஜய்க்கு நன்றி: சீமான் பதிவு

பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் விஜய்க்கு சீமான் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
 விஜய் - சீமான்
விஜய் - சீமான்
Published on: 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8 ஆம் தேதி த்னது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துஇருந்தனர். முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தனர். இந்த நிலையில் முதல் அமைச்சர் விஜய், சீமானுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.

விஜய் வாழ்த்துக்கடிதம்

அதில், அன்பிற்கினிய சீமான் அவர்களுக்கு, தங்களின் 08.11.2026-ஆம் தேதிய பிறந்தநாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும், தங்கள் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும் நன்றியும்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்”என்று பதிவிட்டுள்ளார். பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் விஜய்க்கு நன்றி கூறியுள்ள சீமான், முதல் அமைச்சர் அனுப்பிய வாழ்த்து கடிதத்தையும் பகிர்ந்துள்ளார். சீமான் வெளியிட்ட பதிவில், “என்னுடைய பிறந்தநாளையொட்டி வாழ்த்துச்செய்தி அனுப்பிய முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்!” என்று பதிவிட்டுள்ளார்.

X