மணல் கடத்திய லாரி பறிமுதல்

தூத்துக்குடி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் கடத்திய லாரி பறிமுதல்
Published on

தூத்துக்குடி மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுப்பையா தலைமையிலான அலுவலர்கள் புதுக்கோட்டை-கூட்டாம்புளி ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த லாரியில் முறையான அனுமதி ஆவணங்கள் இன்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com