திண்டிவனத்தில்ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை

திண்டிவனத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனத்தில்ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை
Published on

திண்டிவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் திண்டிவனம் நகர பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏகாம்பரம் பிள்ளை வீதியில் உள்ள ஒரு பெட்டிக்கடை அருகில் இருந்த வீட்டின் முன்பாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அதனை விற்பனைக்காக வைத்திருந்த அதேதெருவை சேர்ந்த மோகன்(வயது 36) என்பவரையும் கைது செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com