யுகாதியை முன்னிட்டு செல்வப்பெருந்தகை வாழ்த்து

இந்நாளில் மக்கள் தங்களது வாழ்வில் புது முயற்சிகளையும், தொழில்களையும் தொடங்கி அதனால் ஏற்றம் பெறுகிறார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
யுகாதியை முன்னிட்டு செல்வப்பெருந்தகை வாழ்த்து
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வசந்த காலத்தின் முதல் நாளை யுகாதி என்ற பெயரில் புதுவருடமாக தெலுங்கு மக்களும், கன்னட மக்களும் இந்நாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர். வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த யுகாதி திருநாள் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் பெற்றுத் தரும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்நாளில் மக்கள் தங்களது வாழ்வில் புது முயற்சிகளையும், தொழில்களையும் தொடங்கி அதனால் ஏற்றம் பெறுகிறார்கள்.

தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 2008 ஆம் ஆண்டில் செம்மொழி தகுதியை அளித்து பெருமைப்படுத்தியதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஆனால், செம்மொழி தகுதி பெற்ற இம்மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவது மிகுந்த வேதனைக்குரியது.

நாட்டில் பல்வேறு மொழி, கலாச்சாரம் என்றிருந்தாலும், இந்தியர் என்ற சகோதர மனப்பான்மையோடு அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து சாதி, மத துவேஷம் நீங்கி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com