செந்தில்பாலாஜி வழக்கு - 3-வது நீதிபதி நியமனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி வழக்கு - 3-வது நீதிபதி நியமனம்
Published on

சென்னை,

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு நேற்று அறிவுறுத்தியிருந்தது.

இந்தநிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3-வது நீதிபதியாக நியமனம் செய்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com