முதுகுளத்தூர் பகுதிகளில் தொடர் திருட்டு

முதுகுளத்தூர் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
முதுகுளத்தூர் பகுதிகளில் தொடர் திருட்டு
Published on

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே உள்ள மேலபனைக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜி என்பவருடைய வீட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகுளத்தூர் அருகே உள்ள கருமல் கிராமத்தை சேர்ந்த முத்துச்செல்வி வீட்டில் பீரோவை உடைத்து 9 பவுன் நகையை திருடி சென்றனர். இப்பகுதிகளில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்ன கண்ணு கூறுகையில் திருட்டை தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்றார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com