அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள சேவை மையம்

அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள சேவை மையம்
Published on

திருவண்ணாமலை

அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் தகவல்கள் தெரிந்து கொள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை 155330 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த சேவை மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை செயல்படும்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சிகள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுயஉதவிக் குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்குதல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், வேளாண் கருவிகள் வாடகைக்கு விடுதல் மற்றும் பெறுதல் ஆகியன குறித்தும் விளக்கங்களை பெறலாம்.

மேலும், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com