

சென்னை,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் இன்று (வியாழக்கிழமை), 13, 15 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணி முதல் மாலை 5.40 மணி வரையில் (4 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, மாலை 3, 4.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடற்கரை-தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கும், மறுமார்க்கமாக, தாம்பரத் தில் இருந்து மதியம் 2.30, மாலை 3.15, 4, 5.24 ஆகிய நேரங்களில் கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.