நெல்லையில் பாலியல் குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் ஒருவர், பெண்கள், குழந்தைகள் மனதில் பாலியல் தாக்குதல் குறித்த பீதியையும், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
நெல்லையில் பாலியல் குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி, தச்சநல்லூர், தேனீர்குளத்தைச் சேர்ந்த லெட்சுமிநாராயணன் மகன் பொன்னிவளவன் (வயது 32) என்பவர், ஒரு குழந்தையை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் அதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் பாலியல் தாக்குதல் குறித்த பீதியையும், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த "பாலியல் குற்றவாளி" ஆவார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று பொன்னிவளவன், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com