8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
ஆண்டுகள் சிறை
Published on

சென்னை,

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த வீட்டு பணி செய்யும் தம்பதியரின் 8 வயது சிறுமியை, அதே குடியிருப்பில் வசிக்கும் 55 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 55 வயதான நபரை கைது செய்தனர்.

தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி எஸ். பத்மா, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com