சென்னை ரெயில் நிலையத்தில் பாலியல் தொல்லை: 5 மாதத்திற்கு பிறகு 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகு போலீசார் சிறுவனை ராயபுரத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
சென்னை ரெயில் நிலையத்தில் பாலியல் தொல்லை: 5 மாதத்திற்கு பிறகு 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்
Published on

சென்னை,

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத இருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டான்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அந்த சிறுவனை 2 பேர் மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று, ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் ஒன்றில் ஏறி காலி பெட்டியில் வைத்து சிறுவனிடம் 2 வாலிபர்கள் தகாத முறையில் நடந்து பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து உள்ளனர்.

இதில் சிறுவனின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சிறுநீர்ப் பாதை தொற்று மற்றும் அவனது ஆசனவாய், வாயில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. பின்னர் சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து காயங்களோடு ரெயில் பெட்டியில் போராடிய சிறுவனை மீட்டு அங்கிருந்தவர்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்போது அந்தச் சிறுவன், தான் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டீக்கடைக்கு சென்றதாகவும் இந்த நேரத்தில் அடையாளம் தெரியாத இருவர் தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காலி ரெயில பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி உள்ளான். இது தொடர்பாக சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுவன் உயிரிழந்து உள்ளான். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகு போலீசார் சிறுவனை ராயபுரத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

அங்கு வைத்து மீண்டும் சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது இதைத் தொடர்ந்து மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளான். தொடர்ந்து சிறுவன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை கொலை வழக்காகவும் மாற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுவன் 5 மாதங்களுக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்திருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com