என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவ கல்லூரி மாணவர் கைது

ஆவடி அருகே என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவ கல்லூரி மாணவர் கைது
Published on

ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 21). இவர், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் 25 வயதான மாணவியுடன் பழகினார்.

அப்போது மாணவியை மிரட்டி இயற்கைக்கு மாறாக அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து என்ஜினீயரிங் மாணவி அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com