மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை ஐகோர்ட்டு...!

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு திரும்ப பெற்றுள்ளது.
மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை ஐகோர்ட்டு...!
Published on

சென்னை,

மாணவனின் தாய்க்கு கடந்த 2010-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக சிவகங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை கடந்த அக்டோபர் 19-ம் தேதி ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கூடாது என சிவசங்கர் பாபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று, புகார்தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதத்தினை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறுவதாக உத்தரவிட்டார்.   

X

Daily Thanthi
www.dailythanthi.com