பல்நோக்கு மைய கட்டிடம் , உடற்பயிற்சி கூடத்தை சேகர்பாபு திறந்து வைத்தார்

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பல்நோக்கு மைய கட்டிடத்தினை இன்று (09.02.2025) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பல்நோக்கு மைய கட்டிடம் , உடற்பயிற்சி கூடத்தை சேகர்பாபு திறந்து வைத்தார்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வெங்கடாபுரம், பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தினை இன்று (09.02.2025) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து வெங்கடாபுரம், பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., நிலை குழு தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் பி.கே. மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் எம்.ஈ. சேகர், ம. கமல், டி.எஸ்.பி. ராஜகோபால், க.வி. நாகவள்ளி, க. பொற்கொடி, சா. உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com