

தூத்துக்குடியில் பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை அமைக்க 6 மாதங்களில் திட்ட அறிக்கை தயாரித்து இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கப் பல் கட்டும் தளத்தால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தூத்துக்குடியில் பிரமாண்ட கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் கொரியாவை சேர்ந்த 'எச்.டி கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் என்ஜினீயரிங்' நிறுவனம், மத்திய அரசு, தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் ஆகியவை இணைந்து ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்தியாவை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக மாற்றுவதும், நவீன தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அதா வது இன்றைய மதிப்பில் ரூ.38 ஆயிரத்து 132 கோடியில் இந்த கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட இருக்கிறது.கொரியா நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயரிங் குழுவினர் கடந்த மாதம் (செப்டம் பர்) தமிழ்நாட்டுக்கு நேரில் வருகை தந்து கப்பல் கட்டும்தளம் அமைய உள்ள தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பகுதியில் ஆய்வு செய்து திரும்பினர்.
இந்த நிலையில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், தென்கொரியாவின் சியோல் நகருக்கு நேரில் சென்று 'எச்.டி கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் என்ஜினீயரிங்' நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்திட்டத்துக்கான கூட்டாண்மை கட்டமைப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கையை 6 மாதங்களுக் குள் இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் இத்திட்டத்தை வேகப்படுத்த கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த கப்பல் கட்டும் தளத்திட்டத்தின் மூலம் நேரடியாக கப்பல் கட்டும் துறை யில் ஆயிரக்கணக்கான தொழில்முறை வல்லுனர்களுக்கும், மறைமுகமாக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், குறிப்பாக என்ஜினீயரிங், மெக்கானிக்கல், வெல்டிங் மற்றும் கடல்சார் தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், வ.உ.சிதம் பரனார் துறைமுகம் ஆசிய அளவில் மிக முக்கியமான வர்த்தக மற்றும் கடல் சார் மையமாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.