தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவு

விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று ஆறுதல் கூறினார்.
தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவு
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டேர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று ஆறுதல் கூறினார். இந்த நிலையில் ,நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு த. வெ.க. தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக த. வெ.க. கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்

தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com