

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக கொத்தனாரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த ரவி மகன் திருமுருகன் (வயது 24). கொத்தானரான இவர் நேற்று கே.வி.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்துள்ளார். மாலையில் வேலை முடிந்து கை கால்களை கழுவி கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த 3 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
பின்னர் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த திருமுருகனை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசாரின் விசாரணையில் கணேசன் நேற்று முன்தினம் இரவு 3 பேருடன் சேர்ந்து மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக 3 பேரும் சேர்ந்து திருமுருகனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமுருகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.