ஜோலார்பேட்டை அருகே சிக்னல் அமைக்கும் பணி: 24-ந் தேதி முக்கிய ரெயில்கள் ரத்து

கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ், பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் ஆகியவை 24-ந் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
ஜோலார்பேட்டை அருகே சிக்னல் அமைக்கும் பணி: 24-ந் தேதி முக்கிய ரெயில்கள் ரத்து
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜோலார்பேட்டை-தொட்டம்பட்டி இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி வரும் 24-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அரக்கோணம்- சேலம் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் அன்றைய தினம் (24-ந் தேதி) இருமார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், கோவை- எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் 24-ந் தேதி இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், ஈரோடு- ஜோலார்பேட்டை பயணிகள் ரெயிலும் இருமார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், கோவை- பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ், பெங்களூரு- கோவை உதய் எக்ஸ்பிரஸ் ஆகியவை 24-ந் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

மேலும், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வரும் 24-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, மாலை 4.15 மணிக்கு புறப்படும். இதேபோல், கோவையில் இருந்து 24-ந் தேதி பகல் 3.15 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் நோக்கி புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக மாலை 5.15 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com