மாணவிகளிடம் சில்மிஷம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது

மாணவிகளிடம் சில்மிஷம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது.
மாணவிகளிடம் சில்மிஷம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பறக்கையை சேர்ந்த நித்ய லட்சுமணவேல் (வயது 59) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் கூறினார்கள். அதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதைதொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக நலத்துறையினர் புகார் செய்தனர். அதன்பேரில் நித்ய லட்சுமணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com