திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் மந்திரி சாமி தரிசனம்


திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் மந்திரி சாமி தரிசனம்
x

சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மந்திரி சண்முகம்

திருவள்ளூர்

சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மந்திரி சண்முகம். இவர் நேற்று மதியம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்கு வந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார்.

கோவில் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் கோவிலுக்குள் சென்று மந்திரி சண்முகம் ஆபத்துசகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார். இதையடுத்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

1 More update

Next Story