

சென்னை,
தேர்தல் நடத்தை விதிகள் அனைத்து கட்சிகளுக்கு சமமானது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது புகார் வந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முன்னாள் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தேர்தல் நடத்தை விதிகளை சிலருக்கு மட்டும் அமல்படுத்தியதாக காங்கிரஸ் செயற்குழு குற்றம்சாட்டியுள்ளதே?
அரசு மற்றும் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான அதிகாரிகளைக் கொண்டு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என, தேர்தல் ஆணையத்தின் அனைத்து செயல்பாடுகளிலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்கள் உடனிருக்கிறார்கள். வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், 20 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (Booth Level Agents - BLAs) தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீத இணையவழி நேரடி ஒளிபரப்பு (webcasting) செய்யப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அனைத்து கட்சிகளுக்கும் சமமானது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது புகார் வந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.