சிறுவாணி அணை விவகாரம் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
சிறுவாணி அணை விவகாரம் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
Published on

சென்னை,

கோவை குடிநீர் ஆதாரமான சிறுவானி அணையில் கேரளா அணை கட்டி வருவது குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசியதாவது:-

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தமிழக-கேரள இரு மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 70 மில்லியன் கன அடி வரை நீரை தேக்கும் அளவுக்கு சிறுவாணி அணையின் குறுக்கே கேரள அரசு அணை கட்டியுள்ளது. செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அனுப்பியுள்ளோம், அணை கட்டுவது உண்மையானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com