

சிவகாசி,
சிவகாசி மாவட்டம் கோப்பைநாயக்கன்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டியில் குரு லட்சுமி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறி கொண்டு இருப்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், வெடி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.