சிவசங்கர் பாபா ஜூலை மாதம் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு உத்தரவு

நீதிபதி ஜூலை மாதம் 15-ம் தேதி மீண்டும் சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
சிவசங்கர் பாபா ஜூலை மாதம் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு உத்தரவு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சாமியார் சிவசங்கர் பாபா மீது 6 போக்சோ 2 பெண் வன்கொடுமை உள்ளிட்ட 8 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த 8 வழக்குகளிலும் சிவசங்கர் பாபா ஜாமீன் பெற்று தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முதல் போக்சோ வழக்கின் விசாரணை நடைபெற்றது. நீதிபதி தமிழரசி முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி அடுத்த மாதம் 15-ந்தேதி சிவசங்கர் பாபாவை ஆஜராக உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com