குடிசை மாற்று வாரிய வீடுகளை பயனாளிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் அன்பரசன் பேட்டி

குடிசை மாற்று வாரிய வீடுகளை பயன்படுத்தும் பயனாளிகள் அல்லாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
குடிசை மாற்று வாரிய வீடுகளை பயனாளிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் அன்பரசன் பேட்டி
Published on

சென்னை,

சென்னை கல்யாணபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அரசு உயரதிகாரிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், குடிசை மாற்று வாரியத்தில் பயனாளிகள் அல்லாது வீடுகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு சிதிலமடைந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அங்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com