நடுவானில் புகை.. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.!

விமானி, லக்னோ விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினார்.
நடுவானில் புகை.. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.!
Published on

லக்னோ,

மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் இருந்து டெல்லி நோக்கி 148 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் மின்னணுப் பகுதியில் புகை வருவதைக் கண்டறிந்த விமானி, உடனடியாக 'May Day' எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி, விமானி லக்னோ விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினார். விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த விமானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com