மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

பாம்பை பார்த்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
Published on: 

திருப்பூர்,

பொங்கலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்குள் 4 அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்ததால், ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்குள் நேற்று திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதனைப் பார்த்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இதுகுறித்து உடனடியாக பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், அலுவலகத்துக்குள் சென்று பாம்பை தேடினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.

பின்னர் அந்தப் பாம்பை பாதுகாப்பாக எடுத்துச் சென்று காட்டுப் பகுதியில் விட்டனர்.

ஊழியர்கள் நிம்மதி

பாம்பு பிடிபட்டதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதையடுத்து அவர்கள் மீண்டும் அலுவலகத்துக்குள் சென்று தங்களது பணிகளைத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X