கோவில் பிரசாதத்தில் பாம்பு: பக்தர்கள் அதிர்ச்சி


கோவில் பிரசாதத்தில் பாம்பு: பக்தர்கள் அதிர்ச்சி
x

பிரசாதத்தில் பாம்பு உயிரிழந்தது குறித்து பக்தர்கள் கேட்டபோது கோவில் நிர்வாகம் சார்பில் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மலைக்கோவில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்தநிலையில், சந்திரசூடேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு தரப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் பாம்பு குட்டி இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரசாதம் கொடுத்தவரிடம் பாம்பு இருந்தது குறித்து கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் சார்பில் அறநிலையத் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் பாம்பு இறந்த கிடந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 More update

Next Story