ஷூவுக்குள் பதுங்கியிருந்து பள்ளி மாணவனை கடித்த பாம்பு .. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

விஷ பாம்பு கடித்ததில், பள்ளி மாணவன் மயங்கி விழுந்தான்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே உள்ள தொழுதூர் பகுதியை கண்ணன். இவரது மகன் கவுசிக் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை கவுசிக் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தான். அப்போது காலில் ஷூவை மாட்டும்போது, அதன் உள்ளே பதுங்கி இருந்த பாம்பு ஒன்று திடீரென கவுசிக்கை கடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவன் அலறினான்.

சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த தாய் ராதா ஓடி வந்தார். அப்போது கவுசிக் மயங்கி விழுந்தான். ஷூவுக்குள் இருந்து விஷ பாம்பு ஒன்று வெளியே ஓடியதையும் அவர் கண்டார். உடனடியாக அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கவுசிக்கை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சோத்தார். முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கவுசிக்குக்கு டாக்டாகள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஷூவுக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்து பள்ளி மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொழுதூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com