ரேஷன் அரிசி மூட்டைகளை மீட்கச் சென்ற இடத்தில் படமெடுத்து ஆடிய நல்லபாம்பு! பீதியில் உறைந்த அதிகாரிகள்

சோதனையின் போது அரிசி மூட்டைகளுக்கு இடையில் இருந்து வெளிப்பட்ட 3 அடி நீள நல்லபாம்பைக் கண்டு அதிகாரிகள் பீதியில் உறைந்தனர்.
ரேஷன் அரிசி மூட்டைகளை மீட்கச் சென்ற இடத்தில் படமெடுத்து ஆடிய நல்லபாம்பு! பீதியில் உறைந்த அதிகாரிகள்
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகள் திருடு போன விவகாரத்தில் போலீசார் சிலரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது திருடப்பட்ட அரிசி மூட்டைகள் கரைக்குடி அருகே கொத்தமங்கலத்தில் வடிவேலு என்பவரிடம் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோனுக்குச் சென்று அங்கிருந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். அரிசி மூட்டைகளை சோதனை செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்து திடீரென வெளிப்பட்ட 3 அடி நீள நல்லபாம்பைக் கண்டு அதிகாரிகள் பீதியில் உறைந்தனர்.

இது குறித்து உடனடியாக தீயணைப்புறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து படமெடுத்து ஆடிய நல்லபாம்பை லாவகமாக பிடித்துச் சென்றனர். அதே சமயம் ரேஷன் அரிசி திருடப்பட்ட விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com