சென்னையில் பனிப்பொழிவு; காலதாமதத்துடன் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் 39 நிமிடம் தாமதமாக வந்தடைந்தது.
சென்னையில் பனிப்பொழிவு; காலதாமதத்துடன் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
Published on

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் ரெயில், பஸ், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. தஞ்சாவூரில் இருந்து தாம்பரம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் 27 நிமிடம் தாமதமாகவும், கொல்லம்-தாம்பரம் ரெயில் 20 நிமிடமும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் 21 நிமிடமும், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 17 நிமிடமும், பல்லவன் எக்ஸ்பிரஸ் 9 நிமிடமும் தாமதமாக சென்னை வந்தடைந்தது.

Also Read
நைஜீரியாவில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை; போப் லியோ வேதனை
சென்னையில் பனிப்பொழிவு; காலதாமதத்துடன் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, பாண்டியன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சென்னைக்கு தாமதமாகவே வந்தன. இதேபோல, டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் 39 நிமிடம் தாமதமாக வந்தடைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com