சமூகநீதி காவலர் வி.பி. சிங் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராக திகழ்ந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிறந்தநாள். இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி வி.பி. சிங் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.

வாழ்த்துகள்

தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் வி.பி. சிங். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார். நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com