அரியலூர் மின் அலுவலகத்தில் இருந்த சில கிராமங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாற்றம்

அரியலூர் மின் அலுவலகத்தில் இருந்த சில கிராமங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.
அரியலூர் மின் அலுவலகத்தில் இருந்த சில கிராமங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாற்றம்
Published on

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட வடக்கு மற்றும் கிராமிய அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ உசேன் நகரம், மேல உசேன் நகரம், மங்கலம், துனிஞ்சபாடி, ஆதனூர், கரம்பியம், மதுரா குடிக்காடு, பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி கிராமங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதையான் கோவில் மின் பிரிவு அலுவலகத்திற்கும், நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர், ஜமீன் பேரையூர், பி.கூத்தூர், விளிவிசை, கொட்டரை, ராமலிங்கபுரம், ரசுலாபுரம், ஜெமீன் ஆத்தூர், பாலம்பாடி ஆகிய கிராமங்கள் கொளக்கானத்தம் மின் பிரிவு அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது மின் தொடர்பான தேவைகளுக்கு இன்று(சனிக்கிழமை) முதல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com